| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

பொதுமக்கள் கவனத்திற்கு...! காவல்துறை அதிரடி பாதுகாப்பு அறிக்கை....!

by Vignesh Perumal on | 2025-05-08 04:01 PM

Share:


பொதுமக்கள் கவனத்திற்கு...! காவல்துறை அதிரடி பாதுகாப்பு அறிக்கை....!

தேனி மாவட்டம், தேனி உட்கோட்டம் வீரபாண்டி காவல் நிலைய சரகத்தில் அமைந்துள்ள ஸ்ரீவீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா 06.05.2025 முதல் 13.05.2025 அன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்படி கோவில் திருவிழாவிற்கு தென்மாவட்டங்களிலிருந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு நாள் ஒன்றுக்கு ஒருலட்சம் வரை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வருகை தந்து கொண்டுடிருக்கிறார்கள் என்பதால் திருவிழாவிற்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் விரிவான பாதுகாப்பு திட்டம் வகுக்கபட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவிழா பாதுகாப்பு அலுவலுக்காக 3 கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் 1 13 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 36 உதவி காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், 235 சார்பு ஆய்வாளர், 420 இதர காவல் ஆளிநர், 65 சிறப்பு காவல்படை ஆளிநர்கள் மற்றும் 317 ஊர்காவல் படையினர் என்று ஆக மொத்தம் 990 காவல்துறை ஆளிநர்கள் பாதுகாப்பு அலுவலுவலில் சுழற்சி முறையில் பாதுகாப்பு அலுவலில் பணியமத்தப்பட்டுள்ளார்கள். பாதுகாப்பு பொதுமக்களின் அலுவர் நியமிப்பதற்காகாவும், பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காகவும். சிரமங்களை உடனுக்குடன் சரிசெய்வதற்காகவும். இரண்டு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காக 8015122868 என்ற தொலைபேசி எண் வழங்கப்பட்டும். வரும் புகார்களை உடனுக்குடன் தீர்வுகாணப்பட்டு வருகிறது.


திருவிழாவிற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்தும் விதமாகவும், திருட்டு மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு கோவில் வளாகம், கடை வீதிகள், பொழுதுபோக்கு பகுதிகள் மற்றும் வாகன நிறுத்தம் ஆகிய இடங்களில் 150 CCTV கண்காணிப்பு கேமிராக்களும், 2 டிரோன் கேமிராக்கள் பொறுத்தப்பட்டு அதன் வாயிலாக திருவிழா நடைபெறம் இடங்கள் முழுவதும் 24 மணிநேரமும் சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறையில் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வரும் நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு கோவில் பகுதிகளைச் சுற்றி மொத்தம் 13 இடங்களில் பொதுமக்கள் மற்றும் வசதிக்காக சுமார் 1300 நான்கு சக்கர வாகனங்களும், 5000 இருசக்கர வாகனங்களும் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டும், அவைகள் அனைத்து CCTV கேமிராக்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருவிழாவினை போது கூட்டத்தில், இதுவரை தொலைந்து போன 8 குழந்தைகளை கண்டுபிடித்து அவர்கள் பெற்றோர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன 1 ஆட்டோ மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் காவல்துறையினரால் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment