by Vignesh Perumal on | 2025-05-08 01:00 PM
தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதிக்கு கனிமவளத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த இலாகா மாற்றத்திற்கான உத்தரவை ஆளுநர் மாளிகை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக அந்த உத்தரவில் பிறப்பித்துள்ளதாவது : "அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறையுடன் சேர்த்து சட்டத்துறையையும் கவனிப்பார். அமைச்சர் ரகுபதி, சட்டத்துறையுடன் கூடுதலாக கனிமவளத்துறையையும் கவனிப்பார். இந்த இலாகா மாற்றம் முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் மாளிகையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இலாகா மாற்றம் நிர்வாக ரீதியிலான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!