| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

பழநியில் பக்தர்கள் சிரமம்...! நிர்வாகம் 'என்ன' முடிவு எடுக்கப்போகிறது..?

by Vignesh Perumal on | 2025-05-08 11:34 AM

Share:


பழநியில் பக்தர்கள் சிரமம்...! நிர்வாகம் 'என்ன' முடிவு எடுக்கப்போகிறது..?

திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரத்தில் வெளியூர் பக்தர்கள் இரவில் கழிப்பறை வசதியின்றி தவிக்கும் அவலம் நீடிக்கிறது. மலைக்கோயில் முருகனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், இரவு நேரங்களில் தங்குமிட வசதி குறைவாக இருப்பதால் அடிவாரப் பகுதிகளிலேயே தங்குகின்றனர். இந்நிலையில், அங்குள்ள கட்டணமில்லா கழிப்பறைகள் இரவு நேரத்தில் திறக்கப்படாததால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அடிவாரம் கிரிவீதியில் அமைந்துள்ள பாலாஜி ரவுண்டானா மற்றும் வின்ச் ஸ்டேஷன் பகுதிகளில் உள்ள இரண்டு கட்டணமில்லா கழிப்பறைகள் இரவு நேரங்களில் பூட்டியே வைக்கப்படுகின்றன. இவை அதிகாலை 4 மணிக்கு மேல்தான் திறக்கப்படுவதால், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

இதனால், பக்தர்கள் கிரிவீதி பகுதிகளில் உள்ள மறைவான இடங்களைத் தேடிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். தற்போது வெயில் காலம் என்பதால் உஷ்ணம் அதிகமாக இருப்பதுடன், இருட்டான பகுதிகளில் விஷப் பூச்சிகளும் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பக்தர்கள் அச்சத்துடன் அந்த இடங்களுக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பழனி தேவஸ்தான நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, இரவு நேரங்களிலும் கட்டணமில்லா கழிப்பறைகளை திறந்து வைத்து சேவை செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். வெளியூர் பக்தர்களின் இந்த அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்ய தேவஸ்தான நிர்வாகம் முன்வருமா என்று பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


நிருபர்கள் பாலாஜி,  கதிரேசன் பழனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment