| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

லஞ்சம் வாங்கிய...! கூட்டுறவு அதிகாரிகள் கைது....!

by Vignesh Perumal on | 2025-05-07 10:11 PM

Share:


லஞ்சம் வாங்கிய...! கூட்டுறவு அதிகாரிகள் கைது....!

விருதுநகரில் 35 ஆண்டுகளுக்கு முன் பெறப்பட்ட ரூ.3 ஆயிரம் கடனுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க எழுத்தர் மற்றும் சார் பதிவாளர் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை எஸ்.பி.பட்டணத்தைச் சேர்ந்த 72 வயதான ஆரோக்கியசாமி என்பவர் தேவகோட்டை கூட்டுறவு சங்கத்தில் வீடு கட்டுவதற்காக 1982 ஆம் ஆண்டு ரூ.3 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். இந்த கடனானது 1990 ஆம் ஆண்டே தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், தனது கடன் ரத்து பத்திரம் மற்றும் அடமானம் வைத்திருந்த சொத்து பத்திரத்தை திரும்பப் பெறுவதற்காக ஆரோக்கியசாமி, விருதுநகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் சார் பதிவாளர் முருகனை முறையான ஆவணங்களுடன் அணுகினார். அப்போது சார் பதிவாளர் முருகன், பத்திரத்தை திருப்பித் தர வேண்டுமென்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆரோக்கியசாமி உடனடியாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனைப்படி, ஆரோக்கியசாமி சார் பதிவாளர் முருகனைத் தொடர்பு கொண்டு லஞ்சப் பணம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். பணத்தை எங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு, முருகன் தனது அலுவலகத்திற்கு வருமாறு கூறினார்.

அங்கு சென்ற ஆரோக்கியசாமி, முருகனின் அறிவுறுத்தலின்படி எழுத்தாளர் மோகனிடம் லஞ்சப் பணத்தைக் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையிலான ஆய்வாளர் பூமிநாதன் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், ரசாயனம் தடவப்பட்ட பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், சார் பதிவாளர் முருகன் மற்றும் எழுத்தாளர் மோகன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment