| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

பழனி பஸ் ஸ்டாண்டில் போலீசாரின் அதிரடி..!!!

by Muthukamatchi on | 2025-05-07 09:27 PM

Share:


பழனி பஸ் ஸ்டாண்டில் போலீசாரின் அதிரடி..!!!

பழனி வ உ சி பேருந்து நிலையத்துக்கு மாற்றத்தைக் கொண்டு வந்த பழனி டிஎஸ்பி தனஞ்செயன் 

திண்டுக்கல் மாவட்டம் பழனி இது அறுபடை வீடுகளில் ஒன்றான தமிழக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் திருக்கோவில் ஸ்தலம் ஆகும்  இங்கு வருடம் முழுவதும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்லும் இடமாக இருக்கிறது  பக்தர்கள் அதிகம் கூடும் இடமாக இருக்கிறது பழனி வஉசி பேருந்து நிலையம் இங்கு ஆதரவற்றவர்கள்  பழனி பேருந்து  நிலையத்திலேயே படுத்துக்கொண்டு சிரமத்துக்கு உள்ளாகி இருந்து வந்தனர்

இது போன்ற பலர் அங்கு இருப்பதால் செல்போன் திருடர்கள்  மற்றும் போதை ஆசாமிகளை கண்டறிவது மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருந்த நிலையில் பழனி உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு தனஞ்செயன் மற்றும் நகர காவல் ஆய்வாளர் திரு. மணிமாறன் அவர்களின் தீவிர முயற்சியால் பழனி பேருந்து நிலையத்தில் தங்கி இருக்கும் முதியவர்களை  பத்திரமாக ஆதரவற்றோர்  அனுப்பி வைத்து அவர்களின் பாதுகாப்புக்கு வழிவகை செய்துள்ளார் மேலும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக  24 மணி நேரமும் காவல்துறையினர் பழனி பேருந்து நிலையத்தில்  ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று  இதற்காகவே சிறப்பாக காவலர்களை நியமித்து  குற்ற சம்பவங்களை முற்றிலுமாக குறைத்துள்ளார்  பழனி காவல் துறையினரின் இந்த முயற்சியால் குற்ற எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்துள்ளது  இந்த நடவடிக்கை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment