by Vignesh Perumal on | 2025-05-07 12:43 PM
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் 214 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னையில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநிலப் போக்குவரத்துக் கழகங்களின் கீழ் 214 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தத் தொடக்க விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புதிய பேருந்துகளின் சேவையை பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும், அவர் பேருந்துகளில் ஏறி பொதுமக்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த புதிய பேருந்துகள் நெல்லை, மதுரை, கோவை, சேலம், விழுப்புரம் போன்ற பல்வேறு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசு புதிதாக 21,068 பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக உலக வங்கி, ஜெர்மனியில் கே. எஃப். டபிள்யூ வங்கி உள்ளிட்டவற்றின் நிதி பயன்படுத்திக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாத நிலவரப்படி மாநில போக்குவரத்து கழகங்களுக்கு 3,778 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. மார்ச் 2026க்குள் புதிதாக 3,468 பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!