by Vignesh Perumal on | 2025-05-07 12:19 PM
பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி வருவதாகவும், எந்தவித தாக்குதலையும் சந்திக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்த்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் பாகிஸ்தானில் 4 இடங்களிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்களிலும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ் காஷ்மீர் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதலை நிறுத்த வேண்டியது அவசியம் என்றும் விக்ரம் மிஸ்த்ரி வலியுறுத்தியுள்ளார். இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அவர் விளக்கமளித்தார்.
மேலும், "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையானது, பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!