by Vignesh Perumal on | 2025-05-06 10:45 PM
நேற்று (05.05.2025) மாலை சிவகங்கை நகரில் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக சிவகங்கை மாவட்ட தலைவர் திரு. பாண்டித்துரை அவர்கள் தலைமை தாங்கினார். பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, மதுரை முன்னாள் மாவட்ட தலைவர் திரு. சசிராமன், சிவகங்கை மாவட்ட முன்னாள் தலைவர் திரு. சத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரைகளை ஆற்றினர்.
ஹெச். ராஜா தனது உரையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலை வன்மையாக கண்டித்தார். மேலும், இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும், தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் தலைவர்கள் தெரிவித்தனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!