| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

மாணவர்கள் கவனத்திற்கு...!கோடைக்கால பயிற்சி முகாம்...! அரிய வாய்ப்பு...!

by Vignesh Perumal on | 2025-05-06 09:07 PM

Share:


மாணவர்கள் கவனத்திற்கு...!கோடைக்கால பயிற்சி முகாம்...! அரிய வாய்ப்பு...!

சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்காக கோடைக்கால பயிற்சி முகாமை நடத்தவுள்ளது. இந்த பயிற்சி முகாம் வரும் மே மாதம் 9-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி 14 நாட்கள் - 14 துறைகள் - 56 தலைப்புகள் - 56 ஆளுமைகள் கொண்டு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி முகாமில் 14 நாட்களுக்கு 14 வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 56 தலைப்புகளில், அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் 56 ஆளுமைகள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த பயிற்சி முகாம் நடைபெறும்.

பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும், பயிற்சி முகாமின் நிறைவில் தமிழ்நாடு அரசின் பொதுநூலகத்துறை சார்பில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலக அரங்கம், 735, எல்.எல்.ஏ. பில்டிங், அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு மெட்ரோ நிலையம் அருகில், சென்னை.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு செய்வது கட்டாயமாகும். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். முன்பதிவு செய்வதற்கான கடைசி நாள் நாளை (07.05.2025) ஆகும்.

மாணவர்கள் எந்தெந்த நாட்களில் எந்தெந்த பயிற்சித் தலைப்புகளில் பங்கேற்க விரும்புகிறார்கள் என்பதை முன்பதிவு செய்யும் போதே குறிப்பிட வேண்டும். பயிற்சித் தலைப்புகள் குறித்த முழு விவரங்கள் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் அறிந்து கொள்ளலாம்.


எனவே, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தங்களது அறிவையும் திறனையும் வளர்த்துக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment