by Vignesh Perumal on | 2025-05-06 08:52 PM
தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்டத்தில் வரும் மே மாதம் 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மே 9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டும், மே 12-ம் தேதி (திங்கட்கிழமை) கூடலூர் அருகே விண்ணேற்றிப்பாறை மலையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு திருவிழாவை முன்னிட்டும் இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வேறொரு வேலை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!