by Vignesh Perumal on | 2025-05-06 08:37 PM
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் நேற்று (05.05.2025) இரவு இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 13 பேருக்கும் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடகாடு பகுதியில் கோயில் திருவிழாவின்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக வெடித்தது. இந்த மோதலில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், சிலர் அரிவாளால் வெட்டப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. மேலும், காவல்துறையினரும் காயமடைந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 13 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 13 பேரையும் இன்று (06.05.2025) புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கும் வரும் மே 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!