by Vignesh Perumal on | 2025-05-06 08:18 PM
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கு விசாரணை வரும் மே 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட 666 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு கலவர வழக்கில் இத்தனை அதிகமானோர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவு, வழக்கு விசாரணையில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த வழக்கில் பள்ளி மாணவியின் தாய் முதல் குற்றவாளியாகவும், விசிக மாவட்ட செயலாளர் இரண்டாவது குற்றவாளியாகவும், மாணவியின் தாய்மாமன் மூன்றாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மூவரையும் வழக்கில் இணைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து வெடித்த இந்த கலவரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பள்ளி வளாகத்தில் வன்முறை வெடித்ததுடன், பள்ளி சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது இந்த வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மே 15-ம் தேதி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!