| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

பரபரப்பு...! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை..! 3 பேர் ஆஜர்...!

by Vignesh Perumal on | 2025-05-06 03:05 PM

Share:


பரபரப்பு...! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை..! 3 பேர் ஆஜர்...!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி சரண்யா கொலை வழக்கில், சரண்யாவின் 2-வது கணவர் பாலனின் முதல் மனைவி மகன் கபிலன், குகன் உள்ளிட்ட மூன்று பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளையைச் சேர்ந்தவர் சரண்யா (38). இவர் பட்டுக்கோட்டை நகர பாஜக மகளிரணித் தலைவராக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சரண்யாவின் 2-வது கணவர் பாலனின் முதல் மனைவி மகன் கபிலன் மற்றும் குகன் உள்ளிட்ட 3 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு சரணடைந்தனர். சரண்யாவின் 2-வது கணவர் பாலனின் சொத்துக்களை அவரது மகன் கபிலனுக்கு வழங்க சரண்யா எதிர்ப்பு தெரிவித்ததால் கொலை நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தில் சரணடைந்த மூவரையும், மதுரை நீதிமன்றம் அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தது. அண்ணா நகர் காவல் நிலைய போலீசார் மூவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment