| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

மாவட்ட ஆட்சியர் பெயரில் மோசடி முயற்சி..! கலெக்டர் எச்சரிக்கை..!

by Vignesh Perumal on | 2025-05-06 02:05 PM

Share:


மாவட்ட ஆட்சியர் பெயரில் மோசடி முயற்சி..! கலெக்டர் எச்சரிக்கை..!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்களின் பெயர் மற்றும் புகைப்படத்தை சிலர் தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட முயற்சிப்பதாக புகார்கள் வந்துள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அன்பான வேண்டுகோளில், "சில நபர்கள் எனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி வாட்ஸ்அப் குறுந்தகவல்கள், வாட்ஸ்அப் அழைப்புகள் மற்றும் இதர சமூக ஊடகங்கள் வாயிலாக பணம் கேட்டு குறுந்தகவல்கள் அனுப்பி மோசடியில் ஈடுபட முயற்சிகள் நடப்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. எனவே, இதுபோன்று மாவட்ட ஆட்சியர் பெயரை பயன்படுத்தி வரும் எந்தவொரு குறுந்தகவல்களையும் யாரும் நம்ப வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இது போன்ற சந்தேகத்திற்கிடமான குறுந்தகவல்கள் அல்லது அழைப்புகள் வந்தால், உடனடியாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கோ அல்லது காவல்துறையினருக்கோ தகவல் தெரிவிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் இதுகுறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், யாரையும் நம்பி பணத்தை இழந்துவிட வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் திரு. செ. சரவணன் எச்சரித்துள்ளார்.

இந்த மோசடி முயற்சி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்களது பணத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும், இதுபோன்ற மோசடி நபர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment