| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

ரேஷன் அரிசி பறிமுதல்..! அதிரடி கைது..!

by Vignesh Perumal on | 2025-05-06 07:07 AM

Share:


ரேஷன் அரிசி பறிமுதல்..! அதிரடி கைது..!

தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய 740 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் திருமதி.வெண்ணிலா மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் வெங்கட்ராமன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று (05.05.2025) மாலை சுமார் 6 மணியளவில் அரிசி கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தஞ்சை பர்மா காலனி அண்ணா நகர் பகுதிகளில் ரோந்து சென்றபோது, பி.எஸ்.எம் மாவு மில் ஆர்.எம்.எஸ் காலனி என்ற இடத்தில் உள்ள மாவு மில்லில் மணிவண்ணன் என்பவரிடம் இருந்து கடத்தப்பட்ட 740 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட அரிசி, பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு சென்றடைய வேண்டியது என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அரிசி கடத்தலில் ஈடுபட்ட மணிவண்ணன் என்பவரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தஞ்சை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வழங்கல் அலுவலர் எச்சரித்துள்ளார்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment