| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

கோடை விடுமுறை..! தீவிர சோதனை..! காவல் ஆய்வாளர் அதிரடி நடவடிக்கை..!

by Vignesh Perumal on | 2025-05-05 09:28 PM

Share:


கோடை விடுமுறை..! தீவிர சோதனை..! காவல் ஆய்வாளர் அதிரடி நடவடிக்கை..!

கோடைகால விடுமுறையை முன்னிட்டு குற்றச் சம்பவங்கள் மற்றும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், பழனி நகர காவல் ஆய்வாளர் திரு. மணிமாறன் தலைமையில் இன்று (05.05.2025) தீவிர வாகன சோதனை நடைபெற்றது.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால், இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வதை தடுக்கும் பொருட்டு இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. பழனி நகரில் உள்ள வி.வி.ஆர். மஹால் முன்பு காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான காவல்துறையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது, தலைக்கவசம் அணியாமல் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கி வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்த தீவிர வாகன சோதனை காரணமாக பழனி நகரில் வாகன விபத்துக்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து விடுமுறை காலம் முடியும் வரை இந்த சோதனை நடைபெறும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment