| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

போலி வட்டாட்சியர் நாடகம்..! மோசடியில் கைது...!

by Vignesh Perumal on | 2025-05-05 09:17 PM

Share:


போலி வட்டாட்சியர் நாடகம்..! மோசடியில் கைது...!

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் எனக்கூறி கூலித் தொழிலாளியிடம் ரூ.1.07 லட்சம் மோசடி செய்த இந்து முன்னணி நிர்வாகிகள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் ஒருவரை கைது செய்த போலீசார், தலைமறைவான மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தேவாரம் அருகேயுள்ள எர்ணம்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரபோஸ் என்பவர் தனது பட்டா மாறுதல் சம்பந்தமாக உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது, அலுவலகம் எதிரே நின்றுகொண்டிருந்த ஒருவர் தன்னை துணை வட்டாட்சியர் என சந்திரபோஸிடம் அறிமுகம் செய்து கொண்டார். பட்டாவில் சிக்கல் இருப்பதாகவும், வட்டாட்சியர் மூலம்தான் அதனை சரி செய்ய முடியும் என்றும் கூறி, உத்தமபாளையம் பிரதான சாலையில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு சந்திரபோஸை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு போலீஸ் பாதுகாப்புடன் இருந்த ஒரு நபரை துணை வட்டாட்சியர் என அறிமுகம் செய்த பெரியசாமி என்பவர், அவர்தான் வட்டாட்சியர் என்று சந்திரபோஸை நம்ப வைத்துள்ளார். அந்த போலி வட்டாட்சியர் கூறியபடி பட்டா மாறுதல் செய்வதற்காக சந்திரபோஸ் நான்கு தவணைகளாக மொத்தம் ரூ.1.07 லட்சத்தை அந்த நபரிடம் கொடுத்து வந்துள்ளார்.

நீண்ட நாட்களாகியும் பட்டா மாறுதல் செய்யப்படாததால் சந்தேகமடைந்த சந்திரபோஸ், தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். பணம் திரும்பக் கொடுக்கப்படாமல் தாமதம் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த சந்திரபோஸ் அப்பகுதியில் விசாரித்தபோது, வட்டாட்சியர் எனக் கூறியவர் உத்தமபாளையம் சுங்கச்சாவடி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் மகன் ராம் செல்வா என்ற செல்வவிக்னேஷ் என்பதும், துணை வட்டாட்சியர் எனக் கூறியவர் கல்லூரிச் சாலையைச் சேர்ந்த முருகன் மகன் பெரியசாமி தாக்கரே என்பதும் தெரியவந்தது.

விசாரணையில், ராம் செல்வா இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும், பெரியசாமி தாக்கரே இந்து முன்னணி நகரத் தலைவராகவும் இருந்துள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் தங்களுக்கு அரசு வழங்கிய போலீஸ் பாதுகாப்பை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதும் அம்பலமானது.

இதையடுத்து, ஏமாற்றப்பட்ட சந்திரபோஸ் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் ராம் செல்வா மற்றும் பெரியசாமி தாக்கரே ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக ராம் செல்வாவை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள பெரியசாமி தாக்குறைவை தீவிரமாக தேடி வருகின்றனர்.


உத்தமபாளையத்தில் இந்து முன்னணி முக்கிய நிர்வாகிகள் அரசு அதிகாரிகளின் பெயரில் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இந்த மோசடி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment