by Vignesh Perumal on | 2025-05-05 06:29 PM
சென்னை கிண்டியில் அமைந்துள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரியும் ஜான்சன் (27) என்பவர், பணியில் இருந்த செவிலியர் ஒருவரை தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஜான்சனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தன்று, மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் ஜான்சன் மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த செவிலியர் லட்சுமி என்பவர், அவரை எழுப்பி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜான்சன், செவிலியர் லட்சுமியை மருத்துவமனை வளாகத்திலேயே ஓட ஓட விரட்டி தாக்க முயன்றுள்ளார்.
இதனை கண்ட சக ஊழியர்கள் உடனடியாக தலையிட்டு செவிலியர் லட்சுமியை காப்பாற்றினர். பின்னர், மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வார்டு பாய் ஜான்சனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜான்சன் மீது பணி நேரத்தில் மது அருந்துதல் மற்றும் பணியில் இருந்த செவிலியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறுவது கண்டிக்கத்தக்கது என்றும், பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. போலீசார் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!