| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் BJP

மக்களை திசை திருப்ப வேண்டாம்..! அமைச்சருக்கு ஹெச். ராஜா பதிலடி...!

by Vignesh Perumal on | 2025-05-05 06:21 PM

Share:


மக்களை திசை திருப்ப வேண்டாம்..! அமைச்சருக்கு ஹெச். ராஜா பதிலடி...!

திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய குழு உறுப்பினர் ஹெச். ராஜா, நீட் தேர்வு குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் தெரிவிக்கும் கருத்துக்களை கடுமையாக விமர்சித்தார்.

அவர் கூறுகையில், "2013ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காங்கிரஸ் ஆட்சியில்தான் முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த உண்மையை உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போது நீட் தேர்வை தடுப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது மட்டுமே ஒரே தீர்வு. ஆனால், தமிழக அரசு மக்களை திசை திருப்பும் விதமாக பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும், முதலமைச்சரைப் போலவே முட்டாள்தனமாக பேசி வருகிறார். உண்மைகளை மறைத்து, மக்களை ஏமாற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்காமல், அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக ஹெச். ராஜா குற்றம் சாட்டினார். உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வதில் தமிழக அரசு காலம் தாழ்த்துவதாகவும் அவர் சாடினார்.

அவரது இந்த கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு குறித்து தமிழக அரசும் பாஜகவும் மாறி மாறி குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment