| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

முன்னாள் எம்.எல்.ஏ. கார் கோர விபத்து..! முன்னாள் அமைச்சர் உடனடி உதவி...!

by Vignesh Perumal on | 2025-05-05 05:48 PM

Share:


முன்னாள் எம்.எல்.ஏ. கார் கோர விபத்து..! முன்னாள் அமைச்சர் உடனடி உதவி...!

புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் இருந்து துவார் நோக்கிச் சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், குளத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜு மற்றும் அவரது ஓட்டுநர் ஆகியோர் படுகாயமடைந்தனர். கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அவ்வழியாக வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், விபத்தை கண்டு உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டார்.

விபத்தில் சிக்கிய முன்னாள் எம்.எல்.ஏ. ராஜு மற்றும் அவரது ஓட்டுநரை உடனடியாக மீட்ட விஜயபாஸ்கர், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர், இருவரையும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தனது வாகனத்தில் அனுப்பி வைத்தார். மேலும், மருத்துவமனையில் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.


இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் சிக்கியவர்களுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக உதவி செய்தது அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.


புதுக்கோட்டை செய்தியாளர்-பழனியப்பன்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment