| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

இந்தியாவின் கடற்கரை நீளம் மறுவரையறை...! 11,098.81 கி.மீ ஆக அதிகரிப்பு...!

by Vignesh Perumal on | 2025-05-05 03:23 PM

Share:


இந்தியாவின் கடற்கரை நீளம் மறுவரையறை...! 11,098.81 கி.மீ ஆக அதிகரிப்பு...!

இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம் தற்போது புதுப்பிக்கப்பட்டு 11,098.81 கிலோமீட்டர்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தியாவின் கடற்கரையின் நீளம் 7,516.6 கிலோமீட்டர்கள் என்று கணக்கிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய கணக்கீட்டின்படி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கடற்கரை நீள பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாவது 


அந்தமான் & நிக்கோபார் தீவுகள் - 3,083.50 கிமீ

குஜராத் - 2,340.62 கிமீ

தமிழ்நாடு - 1,068.69 கிமீ

ஆந்திரப் பிரதேசம் - 1,053.07 கிமீ

மகாராஷ்டிரா - 877.97 கிமீ

மேற்கு வங்காளம் - 721.02 கிமீ

கேரளா - 600.15 கிமீ

ஒடிசா - 574.71 கிமீ

கர்நாடகா - 343.30 கிமீ

கோவா - 193.95 கிமீ

லட்சத்தீவுகள் - 144.80 கிமீ

டாமன் & டையூ - 54.38 கிமீ

பாண்டிச்சேரி - 42.65 கிமீ


இந்த புதிய அளவீடு, இந்தியாவின் கடற்கரை பரப்பளவு குறித்த முந்தைய மதிப்பீடுகளை விட கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட கடற்கரை நீளம், நாட்டின் கடல்சார் எல்லைகள், பொருளாதார மண்டலங்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு திட்டமிடல் ஆகியவற்றில் முக்கியத்துவம் பெறும். குறிப்பாக, அதிக நீளம் கொண்ட அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் குஜராத் மாநிலங்களின் கடல்சார் நிர்வாகத்தில் இது கூடுதல் கவனம் செலுத்த உதவும். தமிழ்நாட்டின் கடற்கரை நீளமும் 1000 கிலோமீட்டருக்கு மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment