by Vignesh Perumal on | 2025-05-04 09:31 PM
திண்டுக்கல் அருகே உள்ள பிலாத்து பாரதி நகரில், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். சப் இன்ஸ்பெக்டர் ராதா தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட இந்த சோதனையில், ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் மொத்தம் 1100 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, அரிசியை பதுக்கியதாக அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெயபாலிடம் இருந்து ரேசன் அரிசியை எதற்காக பதுக்கினார், யாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!