by Muthukamatchi on | 2025-05-04 09:10 PM
மதுரை ஆதீனத்தை கொல்ல முயற்சியா? - கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை மறுப்பு
கடந்த 2-ம் தேதி மதுரை ஆதீனம் காரில் சென்னைக்கு சென்றபோது, உளுந்தூர்பேட்டை-சேலம் சாலை ரவுண்டானா அருகே, ஆதினம் சென்ற காரும், மற்றொரு காரும் மோதிக் கொண்டன. எனினும், இதுகுறித்து எந்த தரப்பிலும் புகார் தெரிவிக்கப்படவில்லை.இதற்கிடையில், தன்னைக் கொல்ல முயற்சி நடந்ததாக மதுரை ஆதீனம் புகார் தெரிவித்துள்ளார். கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை-கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸார் மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டதே இந்த விபத்து என்று தெரியவந்துள்ளது.சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!