by Vignesh Perumal on | 2025-05-04 08:36 PM
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இன்றைய (மே 4, 2025) அறிவிப்பின்படி, தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், கடலூர், விழுப்புரம், மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், நாளை (மே 5) மற்றும் நாளை மறுநாள் (மே 6) ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் கனமழையின் போது பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து வருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!