| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

சௌந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு..! யுனெஸ்கோ அங்கீகாரம் கோரிக்கை...!

by Vignesh Perumal on | 2025-05-04 08:10 PM

Share:


சௌந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு..!  யுனெஸ்கோ அங்கீகாரம் கோரிக்கை...!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் தனித்துவமான சிற்பக்கலை மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள சிற்பங்கள் வேறு எங்கும் காண இயலாத ஒப்பற்ற கலைநயத்துடன் விளங்குகின்றன. இந்த கோவிலின் கட்டிடக்கலை மற்றும் சிற்பங்களின் சிறப்பை உலகறியச் செய்யும் வகையில், யுனெஸ்கோ இதனை உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க வேண்டும். இதற்கான பரிந்துரையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி விரைவில் டெல்லி சென்று மத்திய அரசு அதிகாரிகளை நேரில் சந்திக்க உள்ளதாகவும் விக்னேஷ் பாலாஜி தெரிவித்தார். தாடிக்கொம்பு கோயிலின் தொன்மை மற்றும் கலைச் சிறப்பை எடுத்துரைத்து, யுனெஸ்கோ அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பழமையான கோயிலாகும். இங்குள்ள சிற்பங்கள் மற்றும் கட்டிடக்கலை திராவிட கலைப்பாணியின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக கருதப்படுகின்றன. குறிப்பாக, கருப்ப மண்டபம் மற்றும் அர்த்த மண்டப தூண்களில் அமைந்துள்ள சிற்பங்கள் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கலைநயமிக்கதாக உள்ளன. இந்த கோயிலுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தால், இது உலக அளவில் கவனிக்கப்படும் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாறும் என்றும், இப்பகுதிக்கு பெருமை சேர்க்கும் என்றும் பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment