| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

மறவாமல் தெரிந்து கொள்வோம்..! வரலாற்றில் இன்று...!

by Vignesh Perumal on | 2025-05-04 07:59 PM

Share:


மறவாமல் தெரிந்து கொள்வோம்..! வரலாற்றில் இன்று...!

வரலாற்றின் பக்கங்களில் இன்று (மே 4, 2025) ஒரு முக்கியமான நாள். 1799 ஆம் ஆண்டு இதே நாளில், நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தான் ஆங்கிலேயப் படைகளால் வீர மரணம் அடைந்தார். ஸ்ரீரங்கப்பட்டணம் ஆங்கிலேயர்களின் வசமானது.

நான்காம் மைசூர் போர், திப்பு சுல்தானின் ஆட்சிக்கு ஒரு முடிவாக அமைந்தது. அவரது அமைச்சர்களான மீர் சதக் மற்றும் பூர்ணய்யா ஆகியோர் ஆங்கிலேயர்களிடம் விலை போனது துரதிர்ஷ்டவசமானது. அவர்களால் மைசூர் கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்டன. ஹைதராபாத் நிஜாமின் பெரும் படையுடன் இணைந்து வந்த ஐம்பதாயிரம் ஆங்கிலேய வீரர்களை, வெறும் முப்பதாயிரம் வீரர்களைக் கொண்டு திப்பு சுல்தான் தீரத்துடன் எதிர்கொண்டு போரிட்டார்.

"ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் அண்டிப் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வீரம் காட்டி மடியலாம்" என்ற தனது வீர வசனத்திற்கு ஏற்ப, திப்பு சுல்தான் போர்க்களத்தில் இருந்து தப்பித்து ஓடாமல் வீரத்துடன் போரிட்டு உயிர் துறந்தார். அந்த போரில் எண்ணற்ற உயிர் சேதங்களும், சூறையாடல்களும் நிகழ்ந்திருந்தாலும், ஒப்பற்ற தலைவன் ஒருவன் மறைந்ததற்காக மைசூர் மக்கள் கண்ணீர் விட்டு அழுததாக வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். அன்று ஒரு வீர வரலாறு முடிவுக்கு வந்தது. திப்பு எனும் மாவீரனின் மரணம் நிகழ்ந்த நாள் இன்று.


திப்பு சுல்தான் மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்ந்தார். அவரது ஆட்சியில் நூற்றி ஐம்பத்தாறு இந்து கோயில்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. அவரது ஆட்சியில் நிலவிய மத நல்லிணக்கத்திற்கு இந்த ஒரு தகவல் போதுமானது. கோயில்களுக்கு செலவிடப்பட்ட மொத்த தொகையான 2,33,959 ரூபாயில், இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 ரூபாய் அளிக்கப்பட்டது. அவர் சிருங்கேரி மடத்தின் தலைவருடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தார். மூன்றாம் மைசூர் போரில் மராத்தியர் தலைமையிலான படைகள் நாசப்படுத்திய சிருங்கேரி ஆலயத்தை அவரே சீரமைத்துக் கொடுத்தார். திப்பு சுல்தான் ஒரு மாவீரனாக மட்டுமல்லாமல், மத நல்லிணக்கத்தை போற்றிய ஒரு தலைவனாகவும் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment