| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

பத்மஸ்ரீ விருது பெற்ற 128 வயதான. யோகா பாபா சிவானந்த் காலமானார் :

by Satheesh on | 2025-05-04 03:13 PM

Share:


பத்மஸ்ரீ விருது பெற்ற 128 வயதான. யோகா பாபா சிவானந்த்  காலமானார்  :

பத்மஸ்ரீ விருது பெற்ற 128 வயதான யோகா குரு பாபா சிவானந்த் காலமானார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி , உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:யோகா பயிற்சியாளரும் காசியில் வசிப்பவருமான சிவானந்த் பாபாஜியின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. யோகா மற்றும் தியானத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அவரது வாழ்க்கை, நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.யோகா மூலம் சமூகத்திற்கு சேவை செய்ததற்காக அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. இவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த துயரமான நேரத்தில் அவருக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

செய்தியாளர் :N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment