by Vignesh Perumal on | 2025-05-03 07:19 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) எழுதுவதற்காக மொத்தம் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 3023 தேர்வர்கள் பங்கேற்கவுள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையங்கள் மற்றும் அங்கு தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு: 'சின்னாளப்பட்டி தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 360 தேர்வர்கள், காந்திகிராம் பிஎம்ஸ்ரீ கேந்திராவித்யாலயா பள்ளியில் 480 தேர்வர்கள், காந்திகிராம் ஊரக பல்கலைக்கழக வளாகத்தில் (குருதேவ் அகாடமிக் வளாகம்) 263 தேர்வர்கள், காந்திகிராம் ஊரக பல்கலைக்கழக வளாகத்தில் (தாகூர் வளாகம்) 480 தேர்வர்கள், நத்தம், N.கோவில்பட்டி துரைகமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 480 தேர்வர்கள், திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 480 தேர்வர்கள், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் 480 தேர்வர்கள்' ஆக மொத்தம், இந்த 7 தேர்வு மையங்களிலும் சேர்த்து 3023 மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வை எழுத உள்ளனர்.
தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் எவ்வித அச்சமுமின்றி தேர்வை எழுத அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!