| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

கொடி தாங்கிய கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் தடை...!

by Vignesh Perumal on | 2025-05-03 02:44 PM

Share:


கொடி தாங்கிய கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் தடை...!

பாகிஸ்தான் கொடி தாங்கிய கப்பல்கள் இந்திய துறைமுகங்களில் நுழைவதற்கு இந்தியா தடை விதித்துள்ளது. மேலும், இந்திய கொடி ஏந்திய எந்த ஒரு கப்பலும் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் இந்திய கப்பல் போக்குவரத்திற்கான பொது இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

"பொது நலன் மற்றும் இந்திய கப்பல் போக்குவரத்து நலனுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்" என்று அந்த இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இந்த திடீர் தடைக்கான காரணம் குறித்து இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், சமீப காலமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் ஊடுருவல் முயற்சிகள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எவ்வாறு பதிலளிக்கும் என்பது இதுவரை தெரியவில்லை. இரு நாடுகளின் இந்த பரஸ்பர நடவடிக்கைகளால் வர்த்தக உறவுகள் மேலும் பாதிக்கப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது. குறிப்பாக, கடல் வழி வா்த்தகத்தை பெரிதும் நம்பியுள்ள இரு நாடுகளின் வணிகர்கள் இந்த தடையால் பெரும் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும்.

இந்திய அரசின் இந்த அதிரடி முடிவு பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சர்வதேச அளவில் என்ன மாதிரியான எதிர்வினைகள் வரும் என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கப்பல் போக்குவரத்திற்கான பொது இயக்குனரகத்தின் இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment