| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

49 வீடுகளை மர்ம நபர்கள் சூறையாடிய விவகாரம்...! விசிக சாலை மறியல்...!

by Vignesh Perumal on | 2025-05-03 01:58 PM

Share:


49 வீடுகளை மர்ம நபர்கள் சூறையாடிய விவகாரம்...! விசிக சாலை மறியல்...!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள செண்பகனூரில் பல வருடங்களாக வசித்து வரும் பொதுமக்களின் 49 வீடுகளை மர்ம நபர்கள் சூறையாடியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று (03.05.2025) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செண்பகனூர் பகுதியில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள 49 வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார், எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களது வீடுகள் சூறையாடப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

இந்நிலையில், இந்த வன்முறை சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று செண்பகனூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment