by Vignesh Perumal on | 2025-05-03 12:54 PM
திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தோமையார்புரம் பைபாஸ் அருகே இன்று தனியார் கல்லூரி பேருந்து மீது கார் மோதிய விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த நபர்கள், தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பேருந்து ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து மற்றும் தாக்குதல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!