| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

காவல்துறை தொழில்நுட்பத்தில் பின்தங்கியுள்ளது..! உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை...!

by Vignesh Perumal on | 2025-05-02 04:08 PM

Share:


காவல்துறை தொழில்நுட்பத்தில் பின்தங்கியுள்ளது..! உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை...!

தமிழ்நாடு காவல்துறை தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா வேதனை தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற ஒரு வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, "பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் நீதி பெறுவதற்காக நீதிமன்றத்தின் கதவை தட்ட வேண்டியுள்ளது. காவல்துறையின் விசாரணை அமைப்புகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான காலம் வந்துவிட்டது" என்று குறிப்பிட்டார்.

மேலும், காவல்துறையினர் குற்றங்களை விசாரிப்பதிலும், ஆதாரங்களை சேகரிப்பதிலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தாதது வருத்தமளிக்கிறது என்றும் அவர் கூறினார். தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்கவும் வழிவகை ஏற்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

நீதிபதி ஜெகதீஷ் சந்திராவின் இந்த கருத்து, தமிழ்நாடு காவல்துறையின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் நவீனமயமாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது. விசாரணை அமைப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் நீதி நிர்வாகத்தில் ஏற்படும் முன்னேற்றத்தையும் அவர் வலியுறுத்தினார். காவல்துறையின் செயல்பாடுகள் மேலும் வெளிப்படைத்தன்மையுடனும், துல்லியத்துடனும் நடைபெற தொழில்நுட்பம் இன்றியமையாதது என்றும் அவர் தனது கருத்தில் தெரிவித்தார்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment