| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

ஆஜராக மறுத்த சகாயம்...! பாதுகாப்பு திரும்பப் பெற்றதால் உயிருக்கு ஆபத்து என கடிதம்...!

by Vignesh Perumal on | 2025-05-02 03:54 PM

Share:


ஆஜராக மறுத்த சகாயம்...! பாதுகாப்பு திரும்பப் பெற்றதால் உயிருக்கு ஆபத்து என கடிதம்...!

கிரானைட் ஊழல் தொடர்பான வழக்கில் ஆஜராக மதுரை முன்னாள் ஆட்சியர் உ.சகாயம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சிறப்பு அரசு வழக்கறிஞருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், "தமிழக அரசு எனது பாதுகாப்புப் பிரிவை திரும்பப் பெற்று விட்டதால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மதுரைக்குச் சென்று கிரானைட் ஊழல் தொடர்பான ஆதாரங்களை வழங்க முடியவில்லை" என்று சகாயம் குறிப்பிட்டுள்ளார்.

கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்படும் வழக்குகளை உ.சகாயம் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது விசாரித்து பல்வேறு ஆதாரங்களை சேகரித்தார். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில், சாட்சியம் அளிப்பதற்காகவும், கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்காகவும் சகாயத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்டிருந்த அரசு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதை சுட்டிக்காட்டி, பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மதுரைக்கு வந்து ஆஜராக முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். சகாயத்தின் இந்த பதில் கிரானைட் ஊழல் வழக்கு விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் ஆட்சியர் சகாயத்திற்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படுமா அல்லது அவர் எவ்வாறு சாட்சியம் அளிப்பார் என்பது குறித்து விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment