| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

அரசு மருத்துவமனை நீர்மோர் பந்தல் திறப்பு..! பொதுமக்கள் வரவேற்பு..!

by Vignesh Perumal on | 2025-05-02 03:32 PM

Share:


அரசு மருத்துவமனை நீர்மோர் பந்தல் திறப்பு..! பொதுமக்கள் வரவேற்பு..!

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில், திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டிருந்த இந்த நீர்மோர் பந்தலை இன்று (02.05.2025) திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், டாஸ்மாக் சங்க நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த நீர்மோர் பந்தலின் மூலம் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த சமயத்தில், பொதுமக்களுக்கு குளிர்ச்சியான நீர்மோர் வழங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என்று நிகழ்ச்சியில் பேசியவர்கள் தெரிவித்தனர். மேலும், இது போன்ற பொதுநலப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள டாஸ்மாக் சங்கம் முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.


திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., டாஸ்மாக் சங்கத்தின் இந்த முயற்சியை பாராட்டியதுடன், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த நீர்மோர் பந்தல் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment