| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

நூதன முறையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது..!

by Vignesh Perumal on | 2025-05-02 02:32 PM

Share:


நூதன முறையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது..!

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் ஒருவரை தாடிக்கொம்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சூர்யகலா மற்றும் காவலர்கள் நேற்று (01.05.2025) தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் சோதனையிட்டனர்.

அந்த சோதனையில், அவர் வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்த ஜாகிர்உசேன் மகன் ஜெய்னுலாப்தீன் (24) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஜெய்னுலாப்தீனை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட ஜெய்னுலாப்தீன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment