| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

பெண் அரசு ஊழியர் பல கோடி ரூபாய் மோசடி..!

by Vignesh Perumal on | 2025-05-02 02:21 PM

Share:


பெண் அரசு ஊழியர் பல கோடி ரூபாய் மோசடி..!

திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பெண் அரசு ஊழியர் ஒருவர் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்தவர் ஜெயந்தி (45). இவர் திண்டுக்கல் மாவட்ட கருவூல அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், தனக்கு அரசு உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பலரிடம் கூறியுள்ளார். மேலும், அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி பலரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட ஜெயந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் மற்றும் பணி நியமன ஆணை ஆகியவற்றை போலியாக தயாரித்து வழங்கியுள்ளார். இதனை நம்பி பலரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணராமல் இருந்து வந்துள்ளனர்.

சமீபத்தில், சிலர் தாங்கள் பெற்ற பணி நியமன ஆணைகள் போலியானவை என்பதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று திரண்டு திண்டுக்கல் எஸ்.பி அலுவலகத்தில் ஜெயந்தி மீது புகார் அளித்துள்ளனர். புகாரில், ஜெயந்தி பலரிடம் இருந்து பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்று யாரேனும் ஏமாற்றப்பட்டிருந்தால் உடனடியாக காவல்துறையை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment