| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

தண்ணீர் பீய்ச்சி அடிப்பதற்கு தடை..! அதிரடி உத்தரவு...!

by Vignesh Perumal on | 2025-05-02 01:42 PM

Share:


தண்ணீர் பீய்ச்சி அடிப்பதற்கு தடை..! அதிரடி உத்தரவு...!

மதுரை சித்திரை திருவிழாவில் அதிக விசை கொண்ட நீருந்துகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அதிக விசை கொண்ட நீருந்துகளைப் பயன்படுத்தி ஒருவரையொருவர் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விரத ஐதீகத்தின்படி பக்தர்கள் தோல் பையில் சிறிய குழாய் பொருத்தி மட்டுமே ஒருவரையொருவர் தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்கள் வேதிப்பொருட்கள் எதுவும் கலக்காத சுத்தமான தண்ணீரை மட்டுமே இந்த சடங்கிற்காக பயன்படுத்த வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பக்தர்களின் நலன் கருதியும், விழாவின் புனிதத்தன்மையைக் காக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment