| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்புக்கு இதுதான் காரணம்..! அமைச்சர் அன்பில் மகேஷ்...!

by Vignesh Perumal on | 2025-05-02 12:47 PM

Share:


தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்புக்கு இதுதான் காரணம்..! அமைச்சர் அன்பில் மகேஷ்...!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், CBSE பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை குறைந்த மதிப்பெண் பெற்றால் தோல்வி அடையச் செய்யும் முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதன் முழு விவரம் பின்வருமாறு: "தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்ப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை தோல்வி அடையச் செய்யும் CBSE-யின் புதிய நடைமுறை மாணவர்களின் கல்வி ஆர்வத்தை குறைக்கும். குறிப்பாக 5ஆம் வகுப்பு மாணவர்களை தோல்வி அடையச் செய்தால், அவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும். இது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கடனை வாங்கியாவது CBSE பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அவர்கள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்பதை நாம் உணர வேண்டும். 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் தோல்வி எனக் கூறி பெற்றோர்களிடம் கையெழுத்து கேட்டால், அவர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். இந்த நடவடிக்கையை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

திமுகவினரின் பிள்ளைகளுக்காக மட்டும் பேசவில்லை, அனைத்து மாணவர்களின் நலனுக்காகவும் பேசுகிறோம். எந்த மாணவராக இருந்தாலும், அவர்கள் கல்வி கற்க உரிமை உண்டு. இந்த தோல்வி முறை மாணவர்களின் மன நலனையும் பாதிக்கும். எனவே, CBSE தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார். மேலும், அமைச்சர் அன்பில் மகேஷின் இந்த கருத்து, தேசிய கல்விக் கொள்கை மற்றும் CBSE பள்ளிகளின் புதிய நடைமுறை குறித்து தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment