by Vignesh Perumal on | 2025-05-01 05:22 PM
மே 1, உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் இன்று (01.05.2025) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. இ.பெரியசாமி சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
கூட்டத்தில், அமைச்சர் இ.பெரியசாமி தூய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசுகள் மற்றும் பழச்சாறு வழங்கி கவுரவித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் பேசிய அமைச்சர் இ.பெரியசாமி, தொழிலாளர்களின் உழைப்பையும், தியாகத்தையும் போற்றிப் பேசினார். மேலும், கிராமப்புற வளர்ச்சிக்கு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு. குருமூர்த்தி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு. சா.சதீஸ்பாபு, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு. இரா.சக்திவேல், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக, அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில், "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற உறுதிமொழி அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு. சா.சதீஸ்பாபு ஆகியோர் உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் பங்கேற்றனர். இந்த கிராம சபை கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் திட்டங்கள், தொழிலாளர் நலன்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!