| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

கிராம சபை கூட்டத்தில் ஆர்வமாக கலந்து கொண்டு கேள்விகளை எழுப்பிய பொதுமக்கள்...!!!

by Muthukamatchi on | 2025-05-01 02:16 PM

Share:


கிராம சபை கூட்டத்தில் ஆர்வமாக கலந்து கொண்டு கேள்விகளை எழுப்பிய பொதுமக்கள்...!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் சில்வார்பட்டி ஊராட்சியில்  மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது டெபாசிட் தொகை எவ்வளவு கட்ட வேண்டும் என்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. தெற்கு காலணியில்  சுடுகாட்டில் விளக்கு மற்றும் குடிநீர் குழாய் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு  ஊராட்சி செயலாளர் வீரபத்திரன் பதிலளித்தார்.

அவர் கூறுகையில் பொதுமக்கள் கூறுகின்ற குறைகளை ஊராட்சி சார்பில் சரி செய்து வருகிறோம்.மக்களின் குறைகளை என்னிடம் மனுக்களாக கொடுங்கள். உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி அதற்கான தீர்வை நான் ஏற்படுத்திக் கொடுப்பேன் என்று கூறியுள்ளார். இக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகதிலிருந்து பார்வையாளராக ஜூலி உதவியாளர் என்பவர் கலந்து கொண்டார் ஊராட்சி செயலர் தீர்மானங்கள் வாசித்தார். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல கோரிக்கை மனுக்கள்.கலைஞர் கனவு இல்லம் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து விவாதம் நடைபெற்றது பின்பு நன்றி கூற இனிதே கிராம சபை நிறைவுற்றது.

நிருபர் சதீஷ்குமார் பெரியகுளம் தேனி மாவட்டம்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment