by Vignesh Perumal on | 2025-05-01 11:36 AM
தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், "தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக பெற்றோர்கள் தைரியமாக புகார் அளிக்கலாம் என்றும், புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். அமைச்சரின் இந்த எச்சரிக்கை, தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!