by Vignesh Perumal on | 2025-04-30 01:23 PM
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் கட்டிடங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழிகாட்டு விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், பெரிய அளவிலான அபராதம் விதிக்கப்படவுள்ளது.
புதிய தீர்மானத்தின்படி, 20,000 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பளவு கொண்ட கட்டிடங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த விதிமீறல் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல், 500 சதுர மீட்டர் முதல் 20,000 சதுர மீட்டர் வரை பரப்பளவில் அமைந்துள்ள கட்டிடங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழிகாட்டு விதிமீறல் கண்டறியப்பட்டால், ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்.
விதிமீறல்கள் கண்டறியப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு அவற்றை சரிசெய்வதற்கான எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்படும். விதிமீறல்களை சரிசெய்ய 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். இந்த கால அவகாசத்திற்குள் விதிமீறல்கள் சரி செய்யப்படாவிட்டால், அபராதத்துடன் கட்டுமான நடவடிக்கைகளை நிறுத்தவும் சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தீர்மானம், சென்னையில் ஒழுங்கற்ற கட்டுமானங்களை கட்டுப்படுத்துவதற்கும், கட்டிட விதிகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்வதற்கும் எடுக்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் கட்டிட கட்டுமான நிறுவனங்கள் விதிமுறைகளை மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!