by Vignesh Perumal on | 2025-04-30 12:06 PM
மதுரை அருகே உள்ள கே.கே. நகரில் செயல்பட்டு வந்த ஸ்ரீ இளம் மழலையர் பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியில் நேற்று (29.04.2025) கோடை விடுமுறை சிறப்பு வகுப்பில் பயின்ற 4 வயது சிறுமி ஆருத்ரா, பள்ளி வளாகத்தில் இருந்த திறந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் திவ்யா உட்பட 7 பேர் மீது அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி உயிரிழந்த இந்த துயர சம்பவத்தை அடுத்து, மதுரை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், பள்ளியின் அலட்சியமே சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் என தெரிய வந்ததை அடுத்து, பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் அலட்சியத்தால் ஒரு குழந்தையின் உயிர் பறிபோனது குறித்து பலரும் தங்கள் கவலையை தெரிவித்து வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!