| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

காமகோடி பீடத்தின் மடாதிபதி பொறுப்பேற்ப்பு...! அவர் யாருன்னு தெரியுமா...?

by Vignesh Perumal on | 2025-04-30 11:55 AM

Share:


காமகோடி பீடத்தின் மடாதிபதி பொறுப்பேற்ப்பு...! அவர் யாருன்னு தெரியுமா...?

காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா இன்று (ஏப்ரல் 30, 2025) பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சன்யாச தீட்சை வழங்கினார்.

காஞ்சி சங்கர மடத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், கணேச சர்மாவுக்கு மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சன்யாச தீட்சை அளித்து, மடத்தின் இளைய பீடாதிபதியாக நியமித்தார். சன்யாச தீட்சையின்போது, கணேச சர்மாவுக்கு "சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி" என்று புதிய திருநாமத்தையும் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சூட்டினார்.

இதனைத் தொடர்ந்து, பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், புதிதாக பொறுப்பேற்றுள்ள இளைய பீடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளும் இணைந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமிகளின் அருளாசியைப் பெற்றனர்.

இளைய மடாதிபதி பொறுப்பேற்ற இந்த நிகழ்வு காஞ்சி சங்கர மடத்தின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக கருதப்படுகிறது. சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கர மடத்தின் ஆன்மீக மற்றும் தர்மப் பணிகளை முன்னெடுத்துச் செல்வார் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, வேத பாராயணம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள், ஸ்வாமிகளின் தரிசனம் பெற்று மன அமைதி அடைந்தனர். காஞ்சி சங்கர மடம் தொடர்ந்து ஆன்மீக ஒளி வீசும் தலமாக திகழும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment