by Vignesh Perumal on | 2025-04-30 11:16 AM
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையில்லாமல் வீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்க ரூ.59.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் നേരത്തെ அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் 20 வீடுகள் மாஞ்சோலை தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு வீட்டின் மதிப்பு சுமார் ரூ.11.54 லட்சம் ஆகும். இதில் பயனாளிகள் செலுத்த வேண்டிய ரூ.3 லட்சம் தொகையை அரசே ஏற்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தலைமுறைகளாக மாஞ்சோலையில் வாழ்ந்து வரும் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட உள்ள நிலையில், அவர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் இருப்பிடம் அமைத்து தருவது அரசின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும், கௌரவமாகவும் வாழ வழிவகை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!