by Vignesh Perumal on | 2025-04-30 10:59 AM
திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் இருந்து பழனி பைபாஸ் செல்லும் வழியில் அசோக் குமார் என்பவருக்கு சொந்தமான விறகு கடையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் விறகுக் கடையில் இருந்த விறகுகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மின் கசிவு அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்புத் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தின் சரியான காரணம் மற்றும் சேதம் குறித்த முழு விவரங்கள் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!