| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கட்டுமான தொழிலாளர்கள் பரிதாபமாக பலி...! அப்பகுதியில் பெரும் சோகம்...!

by Vignesh Perumal on | 2025-04-29 06:29 PM

Share:


கட்டுமான தொழிலாளர்கள் பரிதாபமாக பலி...! அப்பகுதியில் பெரும் சோகம்...!

திருப்பதி மாவட்டம் மங்கலம் அருகே குடியிருப்பு பகுதியில் நடைபெற்று வந்த 5-வது மாடி கட்டிட கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்த விபத்தில் மூன்று கட்டுமான தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மங்கலம் அருகே குடியிருப்பு பகுதியில் 5-வது மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நேற்று (ஏப்ரல் 28, 2025) கட்டிடத்தின் பூச்சு வேலைக்காக கட்டப்பட்டிருந்த சாரத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாரம் பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில், 5-வது மாடியில் இருந்து கீழே விழுந்த கட்டுமான தொழிலாளர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கட்டுமான பணியின்போது கட்டட உரிமையாளர் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை என்று தொழிலாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment