| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது...! மாவட்ட ஆட்சியர் அதிரடி...!

by Vignesh Perumal on | 2025-04-28 04:48 PM

Share:


மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது...! மாவட்ட ஆட்சியர் அதிரடி...!

திண்டுக்கல் மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு வரும் 01.05.2025 (வியாழக்கிழமை) அன்று அனைத்து மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) சட்டம் 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற அனைத்து மது விற்பனை நிலையங்களும் மே தினமான 01.05.2025 அன்று முழுமையாக மூடப்பட்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விதிகளுக்கு மாறாக யாரேனும் மது விற்பனையில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மது விற்பனை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment