by Vignesh Perumal on | 2026-06-05 03:28 PM
புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளதாகவும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜகவிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, புதிய இயக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடகப் பக்க நேரலை அண்ணாமலை பேசியதாவது:
பாஜகவில் இணைந்து தமிழ்நாடு மக்களுக்காக 6 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. எந்த இடத்தில் இணைந்தேனே, அதே இடத்தில் மரியாதைதோடு சொல்லிவிட்டு, தமிழர் பண்போடு வெளியேறியுள்ளேன்.
புதிய பாதை, புதிய இயக்கத்தை தொடங்கவுள்ளோம். எனது அரசியல் பாதை நீண்ட நெடியது. சாதாரணமாக வந்துவிடவில்லை. லக்னெளவில் நான் படிக்கும்போது, 2009-ல் தேமுதிகவில் விஜயகாந்த்திடம் 3 மாதங்கள் இன்டர்ன்ஷிப் செய்தேன். அதன்பிறகு 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவில் 6 ஆண்டுகள் பயணித்தேன்.
2020 ஆகஸ்ட் 24 அன்று பாஜகவில் இணையும்போது ரஜினிகாந்த் எனக்கு தொடர்புகொண்டார். அப்போது, அவரது இயக்கத்தில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அப்போது என் கண்முன் இருந்தது, அவர் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டுக்கு நல்லது, ஆனால், கோவிட் காலத்தில் அரசியலுக்கு வராமல் இருப்பது அவருக்கு நல்லது என நினைத்தேன். பாஜகவில் இணைவேன் என்ற வாக்குறுதியை மீறக் கூடாது என அப்போது நினைத்தேன். பின்னர், ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டேன். யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதை கூறுகிறேன்.
பாஜகவில் பயணித்த 6 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அடையாளத்தையும் கலாசார பாரம்பரியத்தையும் விட்டுக்கொடுத்ததில்லை. நான் பெருமைமிகு இந்தியன், பாரம்பரியத் தமிழன்.
தனித்து தேர்தலை சந்திக்க கட்சித் தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தினேன். மேக்கேதாட்டு பிரச்னையின்போது, கர்நாடகத்தில் ஆட்சியிலிருந்த பாஜகவுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தினேன்.
பிரதமர் மோடி மீது மரியாதை வைத்துள்ளேன். கடந்த 18 மாதங்களாக எனக்கு இருக்கு கருத்து வேறுபாடுகளை கூறிவருகிறேன். டிசம்பர் 4, 2025-ல் பாஜகவில் இருந்து விலகுவதாக தெரிவித்தேன். ஆனால், தேர்தலை முடித்துவிட்டு முடிவெடுக்க சொன்னார்கள். அதேபோல், கடைசி வரை தேர்தல் களத்தில் பணியாற்றினேன்.
ஆனந்தத்தோடு தமிழ்நாட்டில் புதிய இயக்கத்தை தொடங்கவுள்ளோம். அடுத்த பொதுத் தேர்தலில் நமது கட்சி கண்டிப்பாக போட்டியிடும்” எனத் தெரிவித்தார்.
குறிப்பாக, இனி நிரந்தரமான எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என்ற குடும்ப அரசியல் கலாசாரம் இருக்காது. தகுதி வாய்ந்த இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இந்த இயக்கத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும்" என்று அண்ணாமலை புதிய பாதையை வகுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) எழுச்சியைத் தொடர்ந்து, தற்போது அண்ணாமலையும் தனிக் கட்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய மற்றும் சுவாரசியமான அதிகாரப் போட்டியை உருவாக்கியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
தலைமை தபால் நிலையம் முன் திடீர் சாலை மறியல்...! திரண்ட மக்களால் பரபரப்பு...!
பாஜகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகல்...! அண்ணாமலை அதிரடி...!
₹10,000 லஞ்சம்...! VAO கைது...! சிறையில் அடைப்பு..!
அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்.! தமிழக அரசு அதிரடி .!!
அமைச்சர் அதிரடி நடவடிக்கை...! அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்...!