by satheesh on | 2026-07-20 11:50 AM
20 லட்சத்திற்காக கணவனை கொன்ற மனைவி - காதலனுடன் சேர்ந்து சதி :
உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அதுல் என்பவர் தனது மனைவி தாமினி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தாமினி வேறு ஒருவருடன் உரையற்ற உறவில் இருந்துள்ளார். தனது கள்ள உறவிற்கு இடையூறாக இருந்த கணவரையும், அவர் போட்டிருந்த இன்சூரன்ஸ் தொகை 20 லட்ச ரூபாயை பெறவும் தனது ஆண் நண்பருடன்திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக தாமினி தனது கணவர் அதுலை தீர்த்தக்கட்ட முடிவு செய்து, தனது ஆண் நண்பரின் உதவியுடன் அதிக விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பை படுக்கையறையில் விட்டு கடிக்க வைத்து கணவரை கொன்று விட்டனர். பிறகு இது விபத்து போல தெரிய வேண்டும் என்பதற்காக அறையிலேயே பாம்பை விட்டுவிட்டனர் .கொலைக்கு பிறகு மனைவி தாமினி சடலத்தின் பக்கத்தில் உட்கார்ந்து அழுது நடித்துள்ளார். பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டு,விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சந்தேகமடைந்த போலீசார் மனைவி தாமினியயை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் 20 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது ஆண் நண்பருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது. மனைவி தாமினி, ஆண் நண்பர் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். கள்ளக்காதல் மற்றும் இன்சூரன்ஸ் பணம்தான் இந்த கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !